இந்தியாவில் பன்னிரண்டு வயதான சிறுமி ஒருவரை அவரது சகோதரர்களும் மாமாவும் இணைந்து கூட்டுப்பாலியல் படுகொலை செய்துள்ளதாக இந்திய மற்றும் சர்வ...
இந்தியாவில் பன்னிரண்டு வயதான சிறுமி ஒருவரை அவரது சகோதரர்களும் மாமாவும் இணைந்து கூட்டுப்பாலியல் படுகொலை செய்துள்ளதாக இந்திய மற்றும் சர்வதேச செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நபர்கள் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு கழுத்தை நெரித்தும் தலையில் அடித்தும் கொலை செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
குறித்த மாணவியின் உடலம் தலை சிதைக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது. உடலம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முதல் நாள் அந்த மாணவியைக் காணவில்லை என பொலிஸில் புகார் அளிக்கப்படது.
பாடசாலை சென்றவர் வீடு திரும்பாததால் பொலிஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதன் பின்னரே மறு நாள் அந்த மாணவியின் உடலம் கண்டெடுகப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்தியாவில் இடம்பெறுவரும் பாலியல் குற்றங்கள் உலகளவில் இந்தியா தொடர்பான பாலியல் அதிர்வலையினை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவம் இந்தியாவையே மீண்டும் உலுக்கியுள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன.
குறித்த சிறுமியின் பாலியல் கொலையுடன் சம்மந்தப்பட்டதாக அவரது மாமாவின்மீது பொலிஸாருக்கு சந்தேகம் எழுந்தது.
இதுகுறித்து விசாரித்தபோது பல அதிர்ச்சிதரும் தகவல்கள் கசிந்தன. மிகவும் திட்டமிட்டே இந்த கொடூரம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையின்மூலமும் பொலிஸ் விசாரணைகளின்மூலமும் தெரியவந்துள்ளது.
அந்த மாணவியின் சகோதரன் ஒருவர் தனது தங்கையை குறித்த மாமாவின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் மாமாவின் வீட்டில் மாமா, மற்றுமொரு நபர் மற்றும் இரண்டாவது சகோதரன் உள்ளிட்டோரால் கூட்டுப் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து இந்த விடயத்தை பொலிஸாரிடம் சொல்லப்போவதாக அந்த மாணவி மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாமாவின் மனைவி அவளது கழுத்தைப் பிடித்து நெரித்ததுடன் ஏனையோரால் தலையில் அடித்து படுகொலை செய்யப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த இடத்திலிருந்து இரத்தக் கறை படிந்த சிறுமியின் ஆடைகளும் தலையில் அடித்துக் கொல்வதற்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மூத்த பொலிஸ் அதிகாரியான அமித் சான்ஹி இந்திய ஊடகம் ஒன்றுக்கு தகவல் தருகையில்,
“எங்களது இரண்டு மூத்த பொலிஸ் அதிகாரிகள் இந்த விடயத்தில் களமிறங்கி அனைத்து ஆதாரங்களையும் சேகரித்துள்ளதுடன் குடும்ப உறவினர்களின் வாக்குமூலங்களையும் பதிவாக்கியுள்ளனர். இதன்படி சிறுமியின் மாமா மற்றும் ஒரு சகோதரர் ஆகியோரைக் கைதுசெய்துள்ளனர். மற்றொரு சகோதரர் தப்பிவிட்டார். அவரைத் தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளனர். விரைவில் அவரையும் பிடித்துவிடுவோம்” என்றார்.
ஏற்கனவே கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை உலகையே இந்தியாவின் பக்கம் திருப்பியிருந்த நிலையில் மீண்டுமோர் சம்பவம் பதிவாகி அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு தரவுகளின்படி இந்தியாவில் நாளொன்றுக்கு 100 பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் குற்றவாளிகளால் அச்சுறுத்தப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.



No comments