அமெரிக்காவிலுள்ள வைத்தியசாலையில் பணியாற்றுவதற்காக இலங்கையில் இருந்து முதல் தடவையாக தாதி ஒருவர் பயணமாகியுள்ளார். இலங்கை தாதியர் சங்கத்தி...
அமெரிக்காவிலுள்ள வைத்தியசாலையில் பணியாற்றுவதற்காக இலங்கையில் இருந்து முதல் தடவையாக தாதி ஒருவர் பயணமாகியுள்ளார்.
இலங்கை தாதியர் சங்கத்தில் பதிவு செய்துள்ள, கண்டி பொது வைத்தியசாலையின் பணிபுரியும் றுவனி ரணசிங்ஹ என்பவரே நேற்று முன்தினம் தாதியர் சேவைக்காக அமெரிக்கா சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இது தவிர மேலும் 25 தாதியர்கள் அமெரிக்கா செல்வதற்கான பயிற்சிகளில் தற்சமயம் ஈடுபட்டுள்ளனர் என்றும் American company, Michigan-based Karma Services நிறுவனத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சமீபத்தில் கைச்சாத்திட்ட உடன்கடிக்கைக்கு அமைவாக 3 000 பேருக்கு இந்த வேலை வாய்ப்பு கிட்டவுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை தாதியர்களுக்கு அமெரிக்காவில் மாதாந்த சம்பளமாக 5 ஆயிரம் அமெரிக்க ($ 5000) டொலர்களாகும் என்று குறப்பட்டுள்ள அதே நேரம், இலங்கை பணியாளர்களுக்காக தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாகவே இது அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ليست هناك تعليقات