Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

மீண்டும் பிரம்மாண்டமாக ஆரம்பமாகிறது வடக்கு கிழக்கு பிறீமிறர் லீக் உதைபந்தாட்டத் தொடர்..?

மீண்டும் பிரம்மாண்டமாக ஆரம்பமாகிறது வடக்கு கிழக்கு பிறீமிறர் லீக் உதைபந்தாட்டத் தொடர்... நடப்பாண்டிற்கான வடகிழக்கு பிறீமியர் லீக் உதைபந்...

மீண்டும் பிரம்மாண்டமாக ஆரம்பமாகிறது வடக்கு கிழக்கு பிறீமிறர் லீக் உதைபந்தாட்டத் தொடர்...

நடப்பாண்டிற்கான வடகிழக்கு பிறீமியர் லீக் உதைபந்தாட்ட தொடர் தொடர்பான நிர்வாக கூட்டம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் உள்ள IBC தமிழ் காரியாலத்தில் தமிழர் உதைபந்தாட்ட கழகத்தின் இயங்குனர் கந்தையா பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.

இவ் கலந்துரையாடலில் தமிழர் உதைபந்தாட்ட கழக இயக்குனர்கள் மற்றும் வடகிழக்கு உதைபந்தாட்ட கழக நிர்வாக அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.

இக் கலந்துரையாடலில் நடப்பாண்டிற்கான போட்டிகள் மற்றும் வீரர்களின் ஏலம் சம்பந்தமான விடயங்கள் உட்பட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

நடப்பாண்டிற்கான போட்டி காலம் மற்றும் போட்டி நடைபெறும் மைதானங்கள் பற்றிய இறுதி முடிவுகள் நடைபெறவுள்ள உரிமையாளர்களுடனான கலந்துரையாடலில் தீர்மானிக்கப்படவுள்ளதாக அறிய முடிகிறது.

இம் முறை போட்டிகள் கடந்த ஆண்டினை விட மிகவும் பிரமாண்டமான ஏற்பாடுகளுடன் வடகிழக்கின் சகல மாவட்டங்களிலும் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இப்போட்டி தொடருக்கு பிரதான அனுசரணையாளராக IBC தமிழ் உள்ளது.

தெற்காசியாவிலேயே இரண்டாவது அதி கூடிய பரிசு தொகையை கொண்ட தொடராக இத் தொடர் அமைவதோடு கடந்து ஆண்டு ரில்கோ கொங்கர்ஸ் எப்.சி சம்பியனாகியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கடந்த ஆண்டு மிகப் பிரமாண்டமான முறையில் நடைபெற்ற இத் தொடர் இந்த ஆண்டும் பல மாற்றங்களுடன் சிறப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

Latest Articles