யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை 1991 உயர்தரப் பிரிவு பழைய மாணவிகளின் நிதி அனுசரணையில் வடக்கு கிழக்கு மாகாண 15 பாடசாலை நூலக...
யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை 1991 உயர்தரப் பிரிவு பழைய மாணவிகளின் நிதி அனுசரணையில் வடக்கு கிழக்கு மாகாண 15 பாடசாலை நூலகங்களுக்கான நூல்கள் சிறகுகள் அமையத்தின் “படிப்பகம்” செயற்றிட்டம் ஊடாக வழங்கிவைக்கப்பட்டது.
“படிப்பகம்” செயற்றிட்டமானது ஆரம்பப்பிரிவு மாணவர்களின் வாசிப்புத்திறனினை விருத்தி செய்யும் வகையில் பாடசாலை நூலக கட்டமைப்பினை உருவாக்கி; மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் 2017 ஆண்டு சிறகுகள் அமையத்தினால் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த செயற்றிட்டம் ஊடாக 25 பாடசாலைகள் இதுவரை பயன்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்.
தேசத்திற்கான கல்விப் பணியில் இணைந்த 1991 உயர்தரப்பிரிவு வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு எமது நன்றிகளும் பாராட்டுக்களும்.
ஊடகப்பிரிவு - சிறகுகள் அமையம்



















No comments