Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

பட்டதாரிகள் 8500பேருக்கு ஆசிரியர் நியமனம்!

பட்டதாரிகளுக்கு அரச தொழிலை பெற்றுக்கொடுக்கும் பொருட்டு 8500 பட்டதாரிகளை இவ்வருடத்தில் ஆசிரியராக நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக கல்வி ...

பட்டதாரிகளுக்கு அரச தொழிலை பெற்றுக்கொடுக்கும் பொருட்டு 8500 பட்டதாரிகளை இவ்வருடத்தில் ஆசிரியராக நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் வேலையில்லா பட்டதாரிகள் அதிகரித்துள்ளமை குறித்து நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பட்டதாரிகளுக்கு அரச தொழில் வழங்கம் வேலைத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 500 பேரை இணைத்துக்கொள்ளவுள்ளதாகவும் அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து தேசிய பாடசாலைகளுக்காக மேலும் 3500 ஆசிரியர்களை இணைக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை உயர் தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மடிகணனிகளை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்

No comments

Latest Articles