Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் ரணில் அரசுடன் சீறிப் பாய்ந்த மைத்திரி!

வேலை வாய்ப்பு கருதி தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு இளைஞர் யுவதிகளை இணைத்துக்கொள்வதற்காக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத...

வேலை வாய்ப்பு கருதி தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு இளைஞர் யுவதிகளை இணைத்துக்கொள்வதற்காக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த இந்த அமைச்சரவைப் பத்திரம் மேற்படி ஜனாதிபதியின் நிராகரிப்பினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த அமைச்சரவைப் பத்திரத்தில், நாடுமுழுவதிலுமிருந்து க.பொ.த உயர்தர சித்தியுடன் 7500 இளைஞர் யுவதிகளைச் சேர்த்துக்கொள்வதென யோசனை முன்வைக்கப்பட்டது.

குறித்த யோசனையுடன் அமைச்சரவையில் முன்மொழியப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை ஜனாதிபதி நிராகரித்தார்.

வேலையற்ற பட்டதாரிகள் நாடுமுழுவதும் ஏராளமாக இருக்கும்போது அவர்களுக்கு வேலை வழங்காமல் புதிதாக உயர் தர சித்தியுடன் வேலை வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை நிராகரித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Latest Articles