Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

53 இலங்கையர்களை திருப்பி அனுப்பியது இஸ்ரேல்!

இஸ்ரேலுக்கு யாத்திரை சென்றிருந்த இலங்கையர்கள் 53 பேர் மீளவும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் (20) மா...


இஸ்ரேலுக்கு யாத்திரை சென்றிருந்த இலங்கையர்கள் 53 பேர் மீளவும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் (20) மாலை மற்றும் நேற்று அதிகாலை இவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

குறித்த நபர்கள் தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகளுக்கு கிடைத்த உளவுத் தகவலுக்கு அமைய அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக இவர்கள் இஸ்ரேலுக்கு சென்றுள்ளமை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குளியாப்பிட்டி, வென்னப்புவ மற்றும் மீரிகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு இஸ்ரேலில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக இவர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

ليست هناك تعليقات

Latest Articles