Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

பொலிசாருக்கு அழுத்தம்கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட தமிழ் அரசியல்வாதி யார் தெரியுமா?

பெருந்தொகையான கேரள கஞ்சா போதைப்பொருட்களைஅருகில் வைத்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை பொலிசாருக்குஅழுத்தம் கொடுத்து விடுவ...


பெருந்தொகையான கேரள கஞ்சா போதைப்பொருட்களைஅருகில் வைத்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை பொலிசாருக்குஅழுத்தம் கொடுத்து விடுவித்ததாக குற்றம்சாட்டப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின்முக்கியஸ்தர் தானே என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சற்று முன்னர் அனுப்பிவைத்துள்ளசெய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் செம்பியன்பற்றுப்பகுதியில் சிவில் உடையில் துப்பாக்கிகளுடன் நின்றவர்களை அப்பகுதி இளைஞர்கள்இராணுவத்திடம் ஒப்படைத்த நிலையில்,ஒப்படைத்த இளைஞர்கள் கஞ்சா கடத்தியதாக சிவில்உடையில் சென்றோர் தகவல் வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார்.

எவ்வாறாயினும் இன்றைய தினம் வெளியாகியிருந்த ஆங்கில பத்திரிகையான “சண்டே டைமஸ்” பத்திரிகையில் போதைப் பொருட்களை அருகில் வைத்திருந்த நிலையில்கைதுசெய்யப்பட்ட பொலிசார் கைதுசெய்திருந்த நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின்முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நேரடியாக தலையிட்டு விடுவித்திருப்பதாக குற்றச்சாட்டொன்றுமுன்வைக்கப்பட்டிருந்தது. .

எனினும் சந்தேகநபர்களை விடுவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின்முக்கியஸ்தர் யார் என்ற தகவலை குறித்த ஊடகம் வெளியிட்டிருக்கவில்லை.

ஆனால் பலம்பொருந்திய தமிழ் தேசியக் கூட்மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரின்திட்டல்களை வாங்கிக்கொண்டு சந்தேகநபர்களை விடுவித்த பொலிஸ் அதிகாரியொருவர் “சும்மாயன்ன துன்னா” என சிங்களத்தில் குறிப்பிட்டிருக்கின்றார். சும்மா யன்ன துன்னாஎன்றால் சும்மா விடுதலை செய்தோம் என்று அர்த்தம்.

யுத்தத்திற்குப் பின்னர் தமிழர் தாயகத்தில் குறிப்பாக வடக்கில் பாரியபிரச்சனையாக உருவெடுத்துள்ள கேரள கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தல்கள் மற்றும்வியாபாரம் தமிழரின் எதிர்காலத்திற்கே பெரும் கவாலை ஏற்படுத்தியிருப்பதாக அச்சம்வெளியிடப்பட்டுவரும்நிலையில் தமிழ் மக்களின் பிரதிநிதியான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர்தலையிட்டு பொலிசாருக்கு அழுத்தங்களை பிரயோகித்து பெருந்தொகையான கேரள கஞ்சாவுடன்கைதானவர்களை விடுதலை செய்திருக்கின்றார் என்ற தகவல் வெளியாகியதால் தமிழ் மக்கள்மத்தியிலும் பெரும் ஆத்திரமும், சந்தேகமும் ஏற்படுத்திருந்தது.

இதனால் தமிழர் சமூகத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி வரும் போதைப்பொருள்கடத்தல் மற்றும் வியாபாரத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு துணை போன தமிழ்தேசியக் கூட்மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் யார் என்ற கேள்விகள் தமிழ் மக்கள்மத்தியில் எழுந்திருந்தது.

அது மாத்திரமன்றி ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தைமீண்டும் ஆட்சிபீடம் ஏற்றுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முன்னின்று உழைத்ததன்காரணம் இதுதானா? என்ற கேள்விகளையும் தமிழர் தரப்பு எழுப்பியிருந்தனர்.

ஆங்கில பத்திரிகையின் செய்திக்கு அமைய, பொலிசாருக்கு கிடைத்த இரகசியத்தகவலொன்றை அடுத்து விசேட பொலிஸ் குழு மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது பெருந்தொகையானகேரள கஞ்சா போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்தன.

வடக்கில் மாத்திரமன்றி தெற்கிலும் பெரும் கேள்வி இருக்கும் கேரள கஞ்சாஎன்றழைக்கப்படும் இந்த போதைப்பொருட்கள் கடல் மார்க்கமாகவே நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்ததாகபொலிசார் தெரிவித்தனர்.

இதற்கமைய பளை பகுதியிலுள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரளகஞ்சா போதைப்பொருட்களை கைப்பற்றுவதற்காகவிசேட பொலிஸ் குழுவொன்று அங்கு சென்ற போது போதைப்பொருள் கடத்தல் கும்பல் பொலிசாருடன்மோதலிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட குழுவின் சார்ஜன்ட் உயர் பொலிஸ்அதிகாரிக்கு தொலைபேசியில் அறிவித்திருக்கின்றார். இதனையடுத்து எந்தவொரு பொலிஸ்நிலையத்திலும் சந்தேக நபர்களை ஒப்படைக்காது அனைவரையும் கிளிநொச்சிக்குஅழைத்துவருமாறு பொலிஸ் உயர் அதிகாரி உத்தரவிட்டிருக்கின்றார்.

இதற்கமைய கிளிநொச்சிக்கு அழைத்துவந்த சந்தேக நபர்கள் மீது கேரள கஞ்சாபோதைப்பொருட்களை அருகில் வைத்திருந்தமை, கடமையை செய்ய விடாது பொலிசாருக்கு இடையூறுவிளைவித்தமை மற்றும் பொலிசார் மீது தாக்குதல் நடத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களைபதிவுசெய்ய பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரான நாடாளுமன்றஉறுப்பினர் ஒருவர் தொலைபேசியில் பொலிஸ் அதிகாரியை தொடர்புகொண்டு, பொலிஸ் அதிகாரிகளை கடும் வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டித் தீர்த்ததுடன்,சந்தேகநபர்களை விடுவிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து பெருந்தொகையான கேரள கஞ்சா போதைப் பொருட்களுடனும், பொலிசாரை தாக்கிய சந்தேக நபர்களை பொலிசார் விடுதலை செய்திருக்கின்றனர்.

இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரின் சாரதியின் சகோதர்என்றும் தெரியப்படுத்தியுள்ள பொலிஸ் அதிகாரி, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறுதான் நாட்டின் ஜனநாயகத்தைகாப்பாற்றுகின்றனர் போலும் என்றும் அங்கிருந்த சக பொலிசாருடன் ஏளனமாக கூறியும்இருக்கின்றார்.

சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் மாஅதிபர் பூஜித்த ஜயசுந்தரவிற்கும் முறையிட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் பாதுகாப்புஅமைச்சின் செயலாளரிடம் முறையிட பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஆங்கிலஊடகம் குறித்த யெ்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கெழும்பு ஆங்கில ஊடகம் வெளியிட்டிருந்த தகவல்களில்எவ்வித உண்மையும் இல்லை என தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றஉறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில்,. செம்பியன்பற்றுப் பகுதியில் கடந்த நான்காம் திகதி ஓர் நிகழ்விற்குசெல்வதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், 3ம் திகதி மாலை அப்பகுதியில் சிலர் சிவில்உடையில் சந்தேகத்திற்கு இடமாக நீண்ட நேரமாக நடமாடியுள்ளனர் என்றும்குறிப்பிட்டுள்ளார்.

அதனை அவதானித்த அப்பகுதியின் சிலஇளைஞர்கள் அவர்களை அனுகி விசாரித்தபோது தாங்கள் பொலிசார் எனக் கூறியுள்ளனர்.இதன்போது குறித்த இளைஞர்கள் பொலிசார் எனக் கூறியவர்களிடம் அடையாள அட்டையைகான்பிக்குமாறு கோரியுள்ளனர். அதன்போது சிவில் உடையில் நின்றோர் கைத்துப்பாக்கிகளை கான்பித்துள்ளனர்.

இதன் காரணமாக அந்த இளைஞர்கள்துப்பாக்கியை கான்பிக்காது அடையாள அட்டையை கான்பிக்குமாறு கோரியுள்ளனர். இதனால்அங்கே சிவில் உடையில் நின்ற ஆயுததாரிகள் வாகனத்தில் அந்த இடத்தில் இருந்துநகர்ந்து சென்றதனால் சில இளைஞர்கள் அவர்களை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்தஅதேநேரம் அருகில் இருந்த இராணுவ முகாமிற்கும் தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்துஇராணுவத்தினர் குறித்த வாகனத்தை விரட்டிப் பிடித்துள்ளனர்.

அவ்வாறு பிடித்தபோது சிவில் உடையில்ஆயுதங்களுடன் இருந்த அனைவரும் பொலிசார் எனஇராணுவத்தினர் அடையாளம் கண்டுள்ளனர்.

இருப்பினும் பளைப் பொலிசாருக்குவழங்கிய தகவலின் பிரகாரம் பளைப் பொலிசாரும் அந்த இடத்திற்கு வந்திருந்த நிலையில சிவில்உடையில் ஆயுதங்களுடன் இருந்த பொலிசார் சீருடைப் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட சிவில் உடைப்பொலிசார் பின்தொடர்ந்து வந்த கிராம இளைஞர்கள் தம்மை தாக்கியதாகவும் தாம் விசேடபோதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிசார் என்றும் பளை பொலிசாரிடம் தெரிவித்தனர்.இதனால் பின்தொடர்ந்து சென்றவர்களிலும் 4 இளைஞர்களைப் பொலிசார் கைதுசெய்திருந்தனர்.

குறித்த விடயம் எனது கவனத்திற்குகொண்டுவந்த நிலையிலேயே நான் பிரதிப் பொலிஸ்மா அதிபரைத் தொடர்பு கொண்டு விடயத்தைவிளக்கினேன். இந்த இடத்தில் குறித்த சம்பவத்துடன் பலர் தொடர்பு பட்ட நிலையில்எவ்வாறு பொய்யான ஓர் தகவல் கொடுக்கப்பட்டது என்று தெரியவில்லை என்று சுமந்திரன்தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Latest Articles