வௌிநாட்டு முதலீட்டாளர்கள் சிலரை ஏற்றிவந்த விமானம் ஒன்று, அனுமதியின்றி நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச வ...
வௌிநாட்டு முதலீட்டாளர்கள் சிலரை ஏற்றிவந்த விமானம் ஒன்று, அனுமதியின்றி நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம், பின்னர் விசேட அனுமதியுடன் திருகோணமலை சீனக்குடா துறைமுகத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதியுடனேயே இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பின்னர் குறித்த விமானம் நாட்டின் அனுமதி பெறதா விமான நிலையம் ஒன்றிலிருந்து நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளமையானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது
சீனா , சிங்கப்பூர் ,ஹொங்கொங் முதலீட்டாளர்களை எற்றிவந்த குறித்த விமானம், கடந்த 03 ஆம் திகதி நாட்டுக்கு வந்துள்ளது.
கிழக்கு மாகாணத்துக்கு வருகை தந்த சிங்கப்பூர் வர்த்தகர் குழுவினர், சீனக்குடா விமான நிலையத்தில் இருந்து முதற்தடவையாக சிங்கப்பூருக்குப் பயணித்துள்ளனர்.
குறித்த குழுவினர் இரு நாள்கள் பயணமாக கிழக்கு மாகாணத்துக்கு வருகை தந்தனர்.
சுற்றுலா , மீன்பிடி, வர்த்தக உடன்படிக்கைகள் ஊடாக கிழக்கு மாகாணத்தில் சிங்கப்பூர் நாட்டின் முதலீடுகளை கொள்ளும் நோக்குடன் குழுவினரின் பயணம் அமைந்தது.
இவர்கள் திருகோணமலையில் தங்கியிருந்து பல இடங்களுக்கு களப் பயணங்களிலும், சந்திப்புக்களிலும் ஈடுபட்டனர்.
இன்று சீன வர்த்தகர் ஒருவரின் சொந்த விமானத்தில் சீனக்குடா விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூரை நோக்கிப் புறப்பட்டனர்.
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம தலைமையிலான குழுவினர், முதலீட்டாளர்களை சீனக்குடா விமான நிலையத்தில் வைத்து வழி அனுப்பி வைத்தனர்.
எனினும் சர்வதேச விமானம் ஒன்று இன்று சீனக்குடா விமான நிலையத்தில் இருந்து முதற் தடவையாக சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம், பின்னர் விசேட அனுமதியுடன் திருகோணமலை சீனக்குடா துறைமுகத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதியுடனேயே இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பின்னர் குறித்த விமானம் நாட்டின் அனுமதி பெறதா விமான நிலையம் ஒன்றிலிருந்து நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.
நாட்டின் குடிவரவு, குடியகல்வு சட்டம் மற்றும் சிவில் விமான சேவைகள சட்டத்திற்கமைய வௌிநாட்டு விமானம் ஒன்று அனுமதி பெறாத விமான நிலையம் ஒன்றிலிருந்து
நாட்டிலிருந்து வௌியேற முடியாது.
எனவே இந்த விமானம் உரிய முறைகளை பின்பற்றி நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லவில்லை என தெரியவந்துள்ளது.
குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தினால் நாட்டிலிருந்து வௌியேறுவதற்காக கப்பல்களுக்கு வழங்கப்படும் அனுமதியைப் பெற்று குறித்து இந்த விமானம் வௌியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.



ليست هناك تعليقات