வவுனியா பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்கிய இரு தனியார் நிறுவன ஊழியர்கள் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை ச...
வவுனியா பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்கிய இரு தனியார் நிறுவன ஊழியர்கள் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வவுனியா போக்குவரத்து பொலிஸாரினால் அதிவேகத்தை கணிக்கும் கருவியுடனான பொலிஸ் உருவப்பொம்மையொன்று வவுனியா ஏ9 வீதியில் வைக்கப்பட்டிருந்தது.
அந்த உருவப்பொம்மைக்கு இலஞ்சம் வழங்குவது போன்று வீடியோ செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இரு ஊழியர்களை நேற்றுமுன்தினம் பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
இதன் போது குறித்த இரு நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
தற்போது அவ்விடத்திலிருந்த உருவப்பொம்மையைப் பொலிஸார் அகற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



ليست هناك تعليقات