மன்னாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் சிங்கள குடும்பங்களுக்கு மன்னார் மாவட்ட முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பம் ஒன்றியத்தின் ம...
மன்னாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் சிங்கள குடும்பங்களுக்கு மன்னார் மாவட்ட முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பம் ஒன்றியத்தின் மூலம் நிவாரணப்பணிகள் வழங்கப்பட்டுள்ளது.
இன்று காலை 11 மணிக்கு இந்த நிவாரணப்பணிகள் வழங்கப்பட்டுள்ளது,
இது தொடர்பில் மேலும்.,
மன்னார் செல்வேரி கட்டுக்காரன் குடியிருப்பு பகுதியில் சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அப்பகுதியில் இடம்பெயர்ந்து, செல்வபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் தற்காலிகமாக வசித்துவரும் 40 குடும்பத்தினருக்கு தமிழர் விழையாட்டு கழகம், பிரான்ஸ் கழகத் தலைவர் திரு யோகச்சந்திரன் அவர்களால் வழங்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் பணத்தில் குறிப்பிட்ட பகுதியில் 40 குடும்பத்தினருக்கும் உலர் உணவு மற்றும் உடைகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த உதவித்திட்டங்கள் குறித்த கிராமத்தின் கிராம சேவகர் முன்னிலையில் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் முன்னாள் வடமாகனசபை அமைச்சர் திரு டெனிஸ்வரன், நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் திரு றோஐன், பொது அமைப்பு உறுப்பினர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் இளைஞர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.



ليست هناك تعليقات