Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

கூட்டமைப்பின் மக்கள் பிரநிதி மீது வழிமறித்து தாக்குதல்!

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினரொருவர் சனிக்கிழமை (01) மாலை தாக்குதலுக்குள்ளான நிலையில் கர...


மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினரொருவர் சனிக்கிழமை (01) மாலை தாக்குதலுக்குள்ளான நிலையில் கரடியாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் பன்குடாவெளி வட்டார உறுப்பினரான சின்னத்துரை சர்வானந்தன் என்பவர் மீதே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இலுப்படிச்சேனையிலுள்ள தனது வீட்டிலிருந்து பன்குடாவெளி நோக்கிச் செல்லும் போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்துக்கு முன்னால் வழிமறித்து தாக்குதல் நடத்தியதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

தாக்கியவரை தனக்கு நன்கு தெரியும் என்றும், கடந்த தேர்தல் காலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு பழி தீர்க்கும் நோக்கில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சின்னத்துரை சர்வானந்தன் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

No comments

Latest Articles