மன்னார் நறுவிலிக்குளத்தில் அமைக்கப்பட்டு வந்த தேசிய பொது விளையாட்டு மைதானத்தில் தொல்லியல் துறை அகழ்வு பணியானது கடந்த 29ம் திகதி முதல் ...
மன்னார் நறுவிலிக்குளத்தில் அமைக்கப்பட்டு வந்த தேசிய பொது விளையாட்டு மைதானத்தில் தொல்லியல் துறை அகழ்வு பணியானது கடந்த 29ம் திகதி முதல் தொல்லியல் திணைகளத்தினால் இடம் பெற்று வருகின்றது.
நேற்று முக்தினம் அகழ்வின் போது குறித்த பகுதி மாந்தைக்கு நிகரான துறைமுகமாக இருந்திருக்கலாம் என்று கருத்து அகழ்வுக்கு பொருப்பான அதிகாரி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது
நேற்று(13) இவ்விடமானது வரலாற்றுக்கு முன்பிருந்தே பாரிய வியாபாராத் துறைமுகம் என்றும் ரோம் சீனா பாரசீகம் போன்ற உலக நாடுகளின் வர்த்தக மையமாக இருந்துள்ளது என்று கூறிய தொல்லியல் துறை அதிகாரி அதற்கு சான்றாக அனுராதபுர யுகத்தின் முதலாவது நாணயம் இங்கே கண்டு எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
மேலும் இப்பகுதியில் அகழ்விற்கு என மொத்தம் பத்து இடங்கள் அடையாளம் காணப்பட்டு எட்டு இடங்களில் அகழ்வு நடைபெறுகிறது அத்துடன் புதிதாக அகழ்வுப்பணி இடம் பெறும் இடத்தின் மண் உடனடி ஆராய்ச்சிக்காக கொழும்பு கொண்டு செல்லப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments