Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

பல புதிர்களை கொண்டு நீண்டு கொண்டே செல்லும் சுரங்க பாதை...! ஆச்சரியத்தின் உச்சம்!

மெக்சிகோவில் இருக்கும் பிரமிட்டுக்கள் பல விதமான புதிர்களை கொண்டு இன்னும் மர்மத்துடன்தான் இருக்கிறது. இங்கு என்ன மாதிரியான வாழ்க்கைம...




மெக்சிகோவில் இருக்கும் பிரமிட்டுக்கள் பல விதமான புதிர்களை கொண்டு இன்னும் மர்மத்துடன்தான் இருக்கிறது. இங்கு என்ன மாதிரியான வாழ்க்கைமுறை பின்பற்றப்பட்டது, மக்கள் எப்படி இவ்வளவு பெரிய பிரமிடுகளை கட்டினார்கள் என்று இன்னும் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது.

இதன் விளைவாக தற்போது பிரமாண்ட பிரமிட்டுக்களில் ஆராய்ச்சியாளர்கள் பெரிய சுரங்க பாதைகளை கண்டுபிடித்துள்ளனர்.

அங்கு வாழ்ந்த மக்களை டியோட்டி ஹூக்கான் மக்கள் என்று அழைக்கிறார்கள். இங்கு இருக்கும் பிரமிட் ஆப் சன் மற்றும் பிரமிடு ஆப் மூன் (pyramid of the sun and moon) இரண்டிற்கும் அருகில் 2 லட்சம் மக்கள் வசித்து இருக்க வாய்ப்புள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த நிலையில்தான் டியோட்டி ஹூக்கான் மக்கள் பயன்படுத்தி வந்த சுரங்க பாதையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பிரமிடு ஆப் மூன் இருக்கும் பகுதிக்கு அடியில் இந்த சுரங்க பாதையை கண்டுபிடித்துள்ளனர்.

இது தொடர்ந்து நீண்டு கொண்டே செல்வதாகவும், இடையில் தடுப்பு உள்ளதையும் கண்டுபிடித்துள்ளனர்.

அதேசமயம் இந்த சுரங்க பாதை பிரமிட் ஆப் சன்னிற்கும் நெருக்கமாக உள்ளது. அதில் இருந்து ஒரு பாதை நீண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதை எப்படி உருவாக்கி இருப்பார்கள் என்று ஆராய்ச்சி நடத்தி வருகிறார்கள்.

இவ்வளவு பெரிய பிரமிடுக்கு கீழே ஏன் இப்படி ஒரு சுரங்க பாதை வைத்துள்ளனர் என்று சந்தேகமும் எழுந்துள்ளது.

இது மத சடங்காக இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். அதாவது பாதாள உலகத்துடன் தொடர்பு கொள்வதற்காக டியோட்டி ஹூக்கான் இந்த பாதையை வைத்துள்ளனர். இதன் வழியாக அவர்கள் பூமிக்கு அடியில் உள்ள பாதாள உலகத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என்று நம்பி இருக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கணிக்கிறார்கள்.



No comments

Latest Articles