யாழ்ப்பாணம் - அல்வாய் பிரதேசத்தில் உள்ள குளம் ஒன்றில் நீராடச் சென்றவர் நீரில் மூழ்கி பலியாகியமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
யாழ்ப்பாணம் - அல்வாய் பிரதேசத்தில் உள்ள குளம் ஒன்றில் நீராடச் சென்றவர் நீரில் மூழ்கி பலியாகியமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குளத்தில் நீராடச் சென்ற குறித்த நபர் வீடு திரும்பாத நிலையில், அவரது குடும்பத்தவர்கள் யாழ்ப்பாணம் - கொடிகாமம் காவல்நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்திருந்தனர்.
இதனை தொடர்ந்து கடற்படையினர் குளத்தில் தேடுதல்களை மேற்கொண்டனர். இதன் போது அவரது உடல் சேற்றில் சிக்கியிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் பலியானவர் அல்வாய் பகுதியை சேர்ந்த 47 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments