யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற அதி சொகுசுபேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் பெண்கள் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 19 ற்கும்மேற்பட்டவர...
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற அதி சொகுசுபேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் பெண்கள் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 19 ற்கும்மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று ஒல்லாந்து கால்வாயில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் 19 பேர் காயங்களுடன் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





No comments