யாழ்.நகரில் 8 பேர் கொண்ட கும்பல் வீடொன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். மேலும் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்...
யாழ்.நகரில் 8 பேர் கொண்ட கும்பல் வீடொன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். மேலும் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் இரு முச்சக்கரவண்டிகள் எரிந்து சேதமாகியுள்ளதுடன், மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளது.
யாழ்ப்பாணம் வைமன் வீதியில் இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆரியகுளம் சந்தியில் கராஜ் வைத்திருக்கும் உரிமையாளர் ஒருவரின் வீட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கராஜ் உரிமையாளர் நேற்று முன்தினம் இரவு இரு முச்சக்கரவண்டிகளையும் வீட்டில் கொண்டு வந்து விட்டுள்ளார். இன்று அதிகாலை 1.55 மணியளவில், வெளியில் பாரிய சத்தம் கேட்டு வீட்டு உரிமையாளர் வெளியே வந்து பார்த்த போது, மேட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த 8 பேர் வீட்டின் கண்ணாடிகள் மற்றும் வாகனங்கள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இரு முச்சக்கரவண்டிகளும் தீ பற்றி எரிந்ததுடன், இரு மோட்டார் சைக்கிள்கள் வாளால் வெட்டப்பட்டும், வீட்டின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதாகவும் வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் உரிமையாளர் கருத்துத்தெரிவிக்கையில்,
தாம் எவருடனும் எந்த பிரச்சினைளுக்கும் செல்வதில்லை என்றும், யார் இவ்வாறான அட்டூழியத்தைப் புரிந்ததென்றும் தெரியாது என வீட்டு உரிமையாளர்கள் மேலும் தெரிவித்தனர்.




No comments