Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை!

வவுனியா நகரசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லையென நகரசபை உறுப்பினர் ஆர்.எம்.லரீப் குற்றம் சுமத்தியு...


வவுனியா நகரசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லையென நகரசபை உறுப்பினர் ஆர்.எம்.லரீப் குற்றம் சுமத்தியுள்ளார்.

வவுனியா நகரசபையில் உறுப்பினர்களினால் முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் அனைத்தும் தீர்மானங்களாக முன்மொழியப்பட்டும் வழிமொழியப்பட்டும் வருகின்றனவே தவிர நடைமுறைப்படுத்தப்படுவதில்லையென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வவுனியா நகர சபையின் 8 ஆவது அமர்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது. இந்த அமர்வின் போது வவுனியா நகரசபையில் உறுப்பினர்களினால் முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் அனைத்தும் தீர்மானங்களாக முன்மொழியப்பட்டும் வழிமொழியப்பட்டும் வருகின்றனவே தவிர அதனை நிறைவேற்றுவதற்குரிய எவ்விதமான நடவடிக்கையும் இடம்பெறுவதில்லை என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நகரசபை உறுப்பினர் ஆர்.எம்.லரீப் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் நகரசபை தலைவர் உடனடியாக தலையிட்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு உடனடியாக தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Latest Articles