யாழ் குடாநாட்டில் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ள ஆவா கும்பலின் தலைன் என அடையாளப்படுத்தப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்த அசோக் என்ற இள...
யாழ் குடாநாட்டில் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ள ஆவா கும்பலின் தலைன் என அடையாளப்படுத்தப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்த அசோக் என்ற இளைஞர் இன்றைய (29) தினம் மல்லாகம் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரை 14 நாட்கள் விளக்கமறியல் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஆவா உள்ளிட்ட பல்வேறு வாள்வெட்டு குழுக்களின் அட்டகாசங்கள் அதிகரித்திருந்தன.
இதனால் மக்கள் அச்சத்துடன் தமது வாழ்க்கையை கழித்ததுடன் ஆவா குழுவை கட்டுப்படுத்த
பொலிஸாரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையிலேயே ஆவா குழுவின் தலைவர் என அடையாளப்படுத்தப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்த அசோக் என்ற இளைஞன் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தனது சட்டத்தரணி ஊடாக இன்று காலை சரணைந்தார்.
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த மோகன் அசோக் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்பதுடன், ஆவா குழுவின் முக்கிய நபராக செயற்பட்டு வந்துள்ளார்.
வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் மானிப்பாய், சுன்னாகம் உள்ளிட்ட பொலிஸாரால் தேடபட்டு வந்த அவருக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் பல வழக்குகள் நிலுவையிலுள்ளன, அந்த வழக்குகளில் அசோக் மீது பிடியாணை உத்தரவுகள் நீதிமன்றால் வழங்கப்பட்டுள்ளன.
இவர், யாழ்.மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பொலிஸ் நிலைய பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நிலையில், இலங்கையில் இருந்து வெளிநாட்டிற்குச் தப்பிச் சென்றதாக பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சந்தேகநபர் இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் தனது சட்டத்தரணி ஊடாகச் சரண்டைந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தால் 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



No comments