Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

கஜா புயலின் தாக்கத்தில் 30 பேருக்கு மேல் பலி; வெளியான அதிர்ச்சி தகவல்!

கஜா புயலின் தாக்கத்தில் தமிழகத்தில் 30 பேருக்குமேல் பலியாகியதுடன் மிகமோசமான உடமையிழப்புக்களும் ஏற்பட்டுள்ளன. நாகப்பட்டினத்திற்கும் வ...



கஜா புயலின் தாக்கத்தில் தமிழகத்தில் 30 பேருக்குமேல் பலியாகியதுடன் மிகமோசமான உடமையிழப்புக்களும் ஏற்பட்டுள்ளன.

நாகப்பட்டினத்திற்கும் வேதாரண்யத்திற்கும் இடையில் இன்று (16.11.2018)அதிகாலையில் கரையைக் கடந்த இந்தப் புயலால் வேதாரணியம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கபட்ட மக்களுக்குரிய நிவாரண உதவிகள் மற்றும் மீட்புபணிகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

எதிர்பார்க்கபட்டது போலவே மணிக்கு 110 கிலோமீற்றர் வேகத்தில் கஜா புயல் வீசியதால் நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளன. குறிப்பாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் தற்போது தனித்தீவாக மாறியுள்ளது.

இந்த புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்த முதற்கட்ட அறிக்கையில் 11 பேர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கபட்டபோதிலும் இறுதியாக கிடைத்த தகவல்களின் படி 30 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர். இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் பத்து பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர்.

சுமார் 13 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால் 500 கிலோமீற்றர். தூரத்துக்கு மின் வழிப் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பல இடங்களில் மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளது. பாதிப்புக்களை சீர்செய்து, மின் விநியோகத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு தமிழக அரசாங்கம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.


இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த ஏழு குழுக்களும் மாநில பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 4 குழுக்கள் பயிற்சியளிக்கப்பட்ட 200 தன்னார்வலர்களும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

தமிழக அரசு உருவாக்கி 421 நிவாரண முகாம்களில் தற்போது 81000 பேர் தங்க வைக்கப்பட்டனர். 22 மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டன. நாகப்பட்டினத்தில் உள்ள தொடருந்து நிலையமொன்றும இந்தப் புயலால் சூறையாடப்பட்டுள்ளது.

தற்போது கஜா காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நகர்ந்து விட்டாலும் மதுரை, திருச்சி, தேனி, திண்டுக்கல், கரூர், கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் தொடர்ந்து கடும் மழை நீடித்துவருகின்றது.

தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை பகுதியில் கடும் மழை பெய்யக்கூடும் என்பதால், அணையின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் திடீர் வெள்ளப் பெருக்கைத் தவிர்க்கவும் அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments

Latest Articles