சீனாவில் இரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சீனாவின் வடக்கே உள்ள சான்ஜியகோ நகரத்தில் உள்ள ஹே...
சீனாவில் இரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் வடக்கே உள்ள சான்ஜியகோ நகரத்தில் உள்ள ஹேபை ஷின்குவா ரசாயனத் தொழிற்சாலையில் இன்று பெரும் வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் 22 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த விபத்தில் 38 லொறிகள், 12 கார்கள் தீக்கு இரையாகியுள்ளன.
வெடி விபத்து ஏற்பட்ட இடத்துக்கு குடிமக்கள் செல்ல வேண்டாம் என்று அம்மாகாண அரசு தெரிவித்துள்ளது.



No comments