Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

விரல்கள் வெட்டப்பட்டு…உடல் துண்டாக்கபட்டது. கஷோக்ஜி குறித்த புதிய குருரங்கள்!

உலகஅளவில் சவூதி ஊடகர் ஜமால் கஷோக்ஜியின் குருரப்படுகொலை குறித்தசெய்திகள் பூதாகரமாகியுள்ளன. துருக்கியின் புலனாய்வுத்தரவுகளின் படி ஊ...



உலகஅளவில் சவூதி ஊடகர் ஜமால் கஷோக்ஜியின் குருரப்படுகொலை குறித்தசெய்திகள் பூதாகரமாகியுள்ளன.

துருக்கியின் புலனாய்வுத்தரவுகளின் படி ஊடகர் கஷோக்ஜி கொல்லப்படவேண்டும் என்ற ஆணையை சவூதிஇளவரசர் முகமது பின் சல்மான் தனது ஆலோசகரான அல் கவுடானி மூலம்உத்தரவிட்டதான திடுக்கிடும். தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு ஆதாரமாக “அந்த நாயின் தலையைக் கொண்டு வா!” என அல் கவுடானிகொலைக்குழுவுக்கு உத்தரவிட்ட குரல் தொடர்பாடலில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஒலிப்பதிவு ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக துருக்கி சொல்கிறது.ஆனால் அதனை இதுவரை பகிரங்கப்படுத்தவில்லை.

இந்த ஒலிப்பதிவை தம்மிடம் வழங்கவேண்டுமென அமெரிக்கா விடுத்தகோரிக்கையைகூட துருக்கி நிராகரித்துவிட்டது.

இதற்கிடையே சவூதி அதிகாரிகளிடம் இருந்து வந்த புதிய தகவல்களில்வேறு புதிய தரவுகள் வந்துள்ளன.



ஊடகர் கஷோக்ஜி வோசிங்டன் போஸ்ற் இதழில் சவூதி அதிகாரமையத்துக்குஎதிராக கடுமையாக எழுதும் பத்தியை நிறுத்துவதற்காக அவரை இஸதான்புல்லில் வைத்து அச்சுறுத்திசவூதிக்கு திரும்பவைக்க சவூதிஅதிகாரிகள் திட்டமிட்டதாக தெரிவிக்கப்படுகிறது

ஆனால் ஒருவேளை கஷோக்ஜி இதற்கு உடன்படாமல் விட்டால் அவரது சுயநினைவைஇழக்கச்செய்து இஸ்தான்புல்லில் உள்ள ஒரு இரகசிய இடத்துக்கு கடத்திச்சென்று 48 மணிநேரத்துக்குதுன்புறுத்துவது எனவும் முடிவுசெய்யப்பட்டது.

இந்த 48 மணிநேரத்திலும் சவூதிக்கு திரும்பும் முடிவை கஷோக்ஜிஎடுக்காமல் விட்டால் உள்ளுர்முகவர்ஒருவரிடம் அவரைஒப்படைத்துவிட்டு சவுதியில் இருந்துசென்ற குழுதிரும்புவது செல்வது என முடிவு செய்யப்பட்டதாக சவூதி அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதற்கிடையே கஷோக்ஜியின் கடத்தல் தொடர்பாக துணைத்தூதரகம் மற்றும்அவர் தடுத்துவைக்கப்பட்ட இரகசிய இடத்தில் இருக்கும் தடயங்களை அழிப்பதற்கென ஒரு இரசாயனப்பகுப்பாய்வுகுழு தயாராக இருந்தாகவும் சவூதி வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆனால் இப்போது சவூதி வட்டாரங்கள் கூறிய இந்த புதியை கதைக்கு மாற்றானதிகில் முடிவுகளே வெளிவந்துள்ளன

உயர்மட்ட உத்தரவில் முதலில் கஷோக்ஜியின் ஊடக விரல்கள் துண்டிக்கப்பட்டன.(சவூதி அதிகாரமையத்துக்கு எதிராக எழுதியமைக்கான குருரத்தண்டனையாக)

அதன்பின்னரும் குருரமாக அவர் சித்ரவதை செய்யப்பட்டிருக்கிறார்.இறுதியில் அவரது தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக தெரிகிறது.

கஷோக்ஜியின் கதை முடிக்கப்பட்டுவிட்டது. இனி அவரது உடலத்தை என்னசெய்வது?கொலைத்தடயங்களை அழிப்பதில் நிபுணரும் உடற்கூற்று ஆய்வு நிபுணராகவும் இருக்கும் வைத்தியர்சலா அல் துபைஜி என்பவருக்கு இப்போது குருரவேலை வருகிறது.

இவர்தான்; கஷோக்ஜியின உடலை வாள் ஒன்றினால் பல துண்டுகளாக வெட்டியதானதிகிலூட்டும் கதைகள் வெளிவந்துள்ளன. இவர் ஒஸ்ரேலியாவின் மெல்பேர்ணில் 2015 இல் உடற்கூற்றியல்துறையில் கற்றவர்.

துண்டுதுண்டுகளாக வெட்டப்பட்ட உடல் இரகசியமாக கொண்டுசெசவூதி அரேபியதூதரக அதிகாரி ஒருவரின் வீட்டுத்தோட்டத்தில் புதைக்கப்பட்டதாகவும். துருக்கி செய்திகள்கூறுகின்றன

இந்தக்கொலைக்குழுவில் இருந்த 15 பேரில் சவூதி இராணுவத்தைச் சேர்ந்த9 பேர் இருந்ததாகவும் இவர்கள்தான் இந்த நடவடிக்கையில் முக்கிய இடத்தைப்பிடித்ததாகவும்கூறப்படுகிறது. இவர்களில் 9 பேர் சவூதி துணைத்தூதரகத்துடன்தொடர்புடைய நடவடிக்கையில் பங்கேற்க அதற்கு துணையாக ஏனையோர் வெளிநடவடிக்கையில் பங்கேற்றதாகவும்துருக்கிதரவுகள் கூறுகின்றன.

சவூதிஅரேபிய தூதரக அதிகாரியின் வீட்டுத்தோட்டத்தில் புதைக்கப்பட்டகஷோக்ஜியின் உடற்பாகங்கள் மீட்கப்பட்டுவிட்டதானசெய்திகள் வந்தன. ஆனால் துருக்கி இந்தசெய்தியை உறுதிப்படுத்தாமல் விட்டாலும் புதிய புதிய திகிலூட்டும் கதைகள் கிளம்பி வருகின்றன.

No comments

Latest Articles