Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

மகளிடம் இருந்து வந்த வாட்ஸ் அப் குறுஞ்செய்தியால் அதிர்ச்சியடைந்த தாய்!

பெண் ஒருவர் தனது மூன்று குழந்தைகளுடன் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் சித்தூரை...




பெண் ஒருவர் தனது மூன்று குழந்தைகளுடன் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் சித்தூரை சேர்ந்த முஸ்தபா - ஷபானா தம்பதிக்கு மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர். இதில் 12 வயதான மூத்த மகனுக்கு இதய நோய் இருந்தது. மற்ற இரு பிள்ளைகளுக்கும் அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

குடும்ப தலைவரான முஸ்தபா ஹொட்டலில் வேலை செய்து வந்த நிலையில் அண்மைக்காலமாக வேலைக்கு ஒழங்காக செல்லவில்லை. அதுமட்டுமல்லாமல் மனைவியின் நடத்தையிலும் சந்தேகப்பட்டு அவருடன் சண்டை போட்டு வந்துள்ளார்.

குடும்ப வறுமை மற்றும் கணவரின் கொடுமையால் மனமுடைந்த ஷபானா சில தினங்களுக்கு முன்னர் தனது தாய்க்கு வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் அனுப்பினார். அதில், முஸ்தபா குடும்ப செலவுக்கு பணம் தராததோடு, என்னையும் கொடுமைப்படுத்துகிறார்.

நான் இந்த உலகில் வாழ விரும்பவில்லை, என் குழந்தைகளுடன் சேர்ந்து தற்கொலை செய்ய விரும்புகிறேன் என குறிப்பிட்டார்.

இதன் பின்னர் ஷபானா தனது மகன்களுடன் மாயமாகி உள்ளார். இது குறித்து ஷபானாவின் தாய் பொலிஸ் புகார் அளித்த நிலையில் ஷபானா மற்றும் பிள்ளைகளை பொலிசார் தேடி வருகிறார்கள்.

No comments

Latest Articles