தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட 7 வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 100 மில்லியன் ரூபா நிதி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட...
தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட 7 வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 100 மில்லியன் ரூபா நிதி அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் கே. மஸ்தான் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவே கணித்து நிதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வவுனியா பூந்தோட்டம் முதியோர் சங்கத்தினால் முதியோர் தினமும் முதியோர் கௌரவிப்பு நிகழ்வும் நேற்று பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் கே. மஸ்தான் , வன்னியிலுள்ள 07 நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு 100 மில்லியன் ரூபா வீதம் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு மாகாணத்திற்கு நிதி சரியாக ஒதுக்கீடு செய்யப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சிலர் குறை கூறுவதாகவும்,
எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சிலர், அரசாங்கத்தின் சகல விடயங்களிற்கும், செயல்திட்டங்களிற்கும் பாரிய ஆதரவை தருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.



No comments