Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் - உச்ச நீதிதிமன்றம் வரலாற்று தீர்ப்பு!

உலக பிரசித்தி பெற்ற கேரள - சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுடைய பெண்களையும் வழிபாட்டிற்காக அனுமதிக்க வேண்டும். பாலின பாகுபாடுக...




உலக பிரசித்தி பெற்ற கேரள - சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுடைய பெண்களையும் வழிபாட்டிற்காக அனுமதிக்க வேண்டும். பாலின பாகுபாடுகளை காரணம் காட்டி பெண்களை கோவிலுக்குள்ளாக அனுமதிக்க மறுப்பதென்பது பெண் தெய்வங்களை வழிபடும் இந்த தேசத்தில் வாழும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

உலகில் நெடுங்காலமாக நடைபெற்று வரக்கூடிய வழக்குகளில் மேற்கண்ட வழக்கும் ஒன்றாகும். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட், கான்வில்கர், இந்து மல்ஹோத்ரா அமர்வு இன்று இந்த வழக்கில் இறுதி தீர்ப்பினை வழங்கியுள்ளது.

அதில், "அனைத்து வயதுடைய பெண்களையும் சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும். பெண் தெய்வங்களை வழிபடும் இந்த தேசத்தில் சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க மறுப்பது சட்ட விரோதம். பெண் கடவுள்களை வணங்கும் நாட்டில் பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல" என அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

முன்னதாக, பெண்களை சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்க கூடாதென சபரிமலை தேவசம் போர்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments

Latest Articles