Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

பலு தீவை தாக்கியது சுனாமி! அண்டிலிசு தீவிலும் புதிய நிலநடுக்கம்!!

இந்தோனேசியாவின் செலபஸ் தீவில் இன்று ஏற்பட்ட அதிசக்தி வாய்ந்த நில நடுக்கத்தையடுத்து ஆழிப்பேரலை தாக்கியுள்ளது. முதலில் பலு தீவுக்கரை...


இந்தோனேசியாவின் செலபஸ் தீவில் இன்று ஏற்பட்ட அதிசக்தி வாய்ந்த நில நடுக்கத்தையடுத்து ஆழிப்பேரலை தாக்கியுள்ளது.

முதலில் பலு தீவுக்கரையை பாரிய சுனாமி அலைகள் தாக்கியுள்ளன. இது நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தில் இருந்து 80 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் இடமாகும்.

தொடர்ந்தும் நிலைமைகளை அவதானத்துடன் கண்காணித்து வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் இந்த ஆழிப்பேரலையால் இலங்கை போன்ற தொலை தூரநாடுகளுக்கு அச்சம் இல்லையென கருதப்படுகிறது.

இந்த நிலையில் கரிபியப் பிராந்தியத்தின் அண்டிலிசு தீவிலும் இன்று 6.3 றிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

ليست هناك تعليقات

Latest Articles