கூட்டமைப்பினரின் பொறுப்பற்ற செயலால் மாடொன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.,...
கூட்டமைப்பினரின் பொறுப்பற்ற செயலால் மாடொன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.,
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகைக்குள் இருக்கும் நானாட்டான் பிரதேச சபையின் மடு - மடுரோட் பிரதான வீதியின் சோதிநகரை அண்மித்த முதலாம் கட்டை வன பாதுகாப்பு பிரிவுக்குரிய காட்டு பகுதியில் தலைமுடி, பிளாஸ்டிக் பொருட்கள், பொழுத்தின் போன்ற கழிவுகளை நானாட்டான் பிரதேச சபை ஊழியர்கள் கொட்டியுள்ளனர்.
இந் நிலையில் சோதிநகர் கிராமத்தை சேர்ந்த ஒரு விவசாயியின் மாடொன்று அந்த கழிவுகளை உண்டு உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு மாடு உயிருக்கு போராடி வந்த நிலையில் உயிர்பிழைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
தவிர இந்த கழிவுகளை காட்டு விலங்குகளும் உட்கொள்ள நேரிடும் எனவும், இதனால் பல உயிர்கள் பாதிப்படைந்துள்ளதுடன், பாதிப்படையவும் உள்ளது எனவும் தெரிவிக்கும் சோதிநகர் கிராம மக்கள், இதனால் தற்போது மழைக்காலம் என்பதால் கொட்டப்பட்ட கழிவுகள் நீரில் கலந்து எமது பகுதிக்குள் வரக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாகவும் இதனால் இக்கிராம மக்கள் பல நோய்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் எனவும் மேலும் தெரிவித்தனர்.
எனவே நானாட்டான் பிரதேச சபை குறித்த பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி இப்பகுதியில் உள்ள மனிதர்களினதும், விலங்குகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





No comments