நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் நடிப்பில் வெளியான நகைச்சுவை காட்சி ஒன்றில் அவர் மருத்துவராக நடித்திருப்பார். அப்போது அவரிடம் சிகிச்சை...
நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் நடிப்பில் வெளியான நகைச்சுவை காட்சி ஒன்றில் அவர் மருத்துவராக நடித்திருப்பார். அப்போது அவரிடம் சிகிச்சைக்காக வரும் நோயாளி ஒருவரின் வயிற்றில் தவறுதலாக ஹெல்மெட்டை வைத்து அறுவை சிகிச்சை செய்துவிடுவார். அதற்கு பின் பாதிக்கப்பட்ட நோயாளியின் தரப்பினர் வடிவேலுவை கடுமையாக தாக்குவதாக அமைந்திருக்கும் அந்த காட்சி.
வடிவேலுவின் நகைச்சுவை காட்சியை போன்றே நிஜத்திலும் ஓர் பகீர் சம்பவம் நடந்துள்ளது. அதுவும் தமிழகத்தில் சென்னையில்.
கடந்த 2011 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம், மணலூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற கார் ஓட்டுனருக்கு விபத்து ஏற்பட்ட காரணத்தினால் அவர் சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சையின் போது அவரின் வயிற்றில் கத்தரிக்கோலை வைத்து சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய கிருஷ்ணமூர்த்திக்கு வயிற்றில் அடிக்கடி வலி ஏற்படவே அவர் தஞ்சை அரசு மருத்துவமனையில் சோதனை செய்துள்ளார். அப்போது, அவரது வயிற்றில் கத்தரிக்கோல் இருப்பது கண்டறியப்பட்டது.
தொடர்ந்து, தஞ்சை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் கிருஷ்ணமூர்த்தி. அதில், கத்தரிக்கோல் வைத்து அறுவை சிகிச்சை செய்ததன் காரணமாக தன்னால் அடுத்த 5 ஆண்டுகள் சரியாக வேலைக்கு செல்ல முடியவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கிருஷ்ணமூர்த்தியின் வழக்கினை விசாரித்த நீதிமன்றம், மருத்துவர்களின் கவன குறைவால் அறுவை சிகிச்சையின் போது வயிற்றில் கத்தரிக்கோல் வைக்கப்பட்டதால் மனுதாரருக்கு இழப்பீடாக ரூ. 10 லட்சமும், வழக்கு செலவாக ரூ. 5 ஆயிரமும்வழங்கிட வேண்டுமென சுகாதார மற்றும் குடும்ப நலத்துரைக்க உத்தரவிட்டார்.



No comments