Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

ஓடுபாதையில் விமானத்தை துரத்திய இளைஞர்! டப்ளின் விமானநிலையத்தில் அதிர்ச்சி!

இன்று காலை அயர்லாந்து தலைநகர் டப்ளின் விமான நிலைய ஓடுபாதையை கலக்கியமனிதர் ஒருவர் பாதுகாப்பு அதிகாரிகளால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.இ...



இன்று காலை அயர்லாந்து தலைநகர் டப்ளின் விமான நிலைய ஓடுபாதையை கலக்கியமனிதர் ஒருவர் பாதுகாப்பு அதிகாரிகளால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.இந்தச்சம்பவத்தால் விமான நிலயத்தில் பதற்றம் ஏற்பட்டது.

காலை ஏழு மணியளவில் அம்ஸ்ரடாம் நோக்கிய பயணத்துக்காக ரயன் எயார் விமானம் ஒன்று ஒடுபாதையில் நகர்ந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் திடிரென தனது பணப்பெட்டியுடன் ஒடுபாதைக்குப்பாய்ந்த 20 வயதான இளைஞர் ஒருவர் விமான ஓட்டிக்கு கைகளை அசைத்து நிறுத்து நிறுத்து என கத்தியபடி விமானத்தின் பின்னால் ஓடினார்.

இந்தச்சம்பவத்தைக்கண்டு விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.விரைந்து செயற்பட்ட அவர்கள் ஓடுபாதையில் ஓடிய அந்த மனிதரை மடக்கிப்பிடித்தனர். இதனையடுத்து வாகனங்களில் விரைந்த காவற்துறையினர் அவரை கைது செய்தனர்.

இவரும் மேற்படி விமானத்தில் பயணிக்க இருந்த ஒரு பயணி என்பதும் ஆனால் உரியநேரத்துக்கு வராததால் அவருக்கு உரிய பயணவாய்ப்பு மறுக்கப்பட்டதால் திடீரென ஒடுபாதையில் இறங்கி விமானத்தை துரத்திசென்றதாக தெரியவருகிறது. கைதுசெய்யப்பட்ட இவர் டப்ளின் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

No comments

Latest Articles