உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று யாழில் பொது அமைப்புக்களால் கொட்டும் மழையிலும் பாரிய ஆர்பாட்டம் ம...
உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று யாழில் பொது அமைப்புக்களால் கொட்டும் மழையிலும் பாரிய ஆர்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பதினைந்து நாட்களுக்கும் மேலாக அநுராதபுரம் சிறையிலே அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டுவருகின்றார்கள். தமக்கு புணர்வாழ்வழிக்கவேண்டும் அல்லது விடுதலைசெய்யபடவேண்டும் என்பது அவர்களின் கோரிக்கைகளாக இருக்கிறன.
அவர்களது உண்ணாவிரதம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. உரியதீர்வுகள் கிடைக்கும் வரைக்கும் தமது போராட்டத்தை கைவிடாமல் தொடர்வதற்கான முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள். இன்னும்காலம் தாழ்த்தப்பட்டால் தாம்எடுத்துக்கொள்ளும் மருந்துகள் அனைத்தையும் நிறுத்தப்போவதாக தெரிவித்துள்ளார்கள்.
ஆகவே அரசியல் கைதிகளின் போராட்டம் நியாயமானது அது வெல்லபடவேண்டும் அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என பொது அமைப்புக்கள் இன்று கொட்டும் மழையிலும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.




No comments