Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

காரை நிறுத்தாமல் சென்ற இளைஞரை சுட்டுக்கொன்ற போலீஸ்.!

உத்தரப்பிரதேசத்தில் ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இளைஞர் ஒருவர், இரண்டு போலீஸ் கான்ஸ்டபிள்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள ச...




உத்தரப்பிரதேசத்தில் ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இளைஞர் ஒருவர், இரண்டு போலீஸ் கான்ஸ்டபிள்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆப்பிள் நிறுவனத்தில் நிர்வாகியாக பணிபுரிந்தவர் விவேக் திவாரி. இவர், ஆப்பிள் நிறுவனத்தின் iPhone X மொபைல் அறிமுக விழாவில் கலந்து கொண்ட பின், லக்னோவில் நேற்று நள்ளிரவு கோமதி நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் தன்னுடன் பணிபுரியும் பெண் அதிகாரி சனா கான் என்பவருடன் எஸ்யுவி காரில் வந்துக் கொண்டிருந்தார்.

அப்போது, மீரட் காவல் நிலையத்தைச் சேர்ந்த பிரஷாந்த் சௌத்ரி, சந்தீப் என்ற 2 போலீசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது காரில் வந்த விவேக் திவாரியையும் தடுத்து நிறுத்தியதாகவும், அதற்கு அவர் காரை நிறுத்தாமல் சென்றதாகவும் கூறப்படுகிறது. அதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது.

இதில் படுகாயமடைந்த விவேக் திவாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

காவல்துறையினர் தங்கள் நண்பரை வேண்டுமென்றே சுட்டுக்கொன்றதாக விவேக் திவாரியின் நண்பர்களும், விவேக் திவாரி தங்களது மீது கார் ஏற்றி கொள்ள முயன்ற காரணத்தினால் தான் எங்களது தற்காப்பிற்காக துப்பாக்கியால் சுட்டோமென போலீசார் பிரஷாந்த் சௌத்ரி, சந்தீப் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், "இது என்கவுண்ட்டர் அல்ல. தேவைப்பட்டால், சிபிஐ விசாரணை கோரப்படும்" என தெரிவித்துள்ளார்.

ليست هناك تعليقات

Latest Articles