Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களுக்கான நீதி ஒருபோதும் உள்நாட்டில் கிடைக்காது!

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களுக்கான நீதி ஒருபோதும் உள்நாட்டில் கிடைக்கவே கிடைக்காது என்று அடித்துக்கூறும் முன்னாள் நாடாளுமன்...


தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களுக்கான நீதி ஒருபோதும் உள்நாட்டில் கிடைக்கவே கிடைக்காது என்று அடித்துக்கூறும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன், தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு சிறிலங்கா ஜனாதிபதியும், பிரதமரும் தயாரில்லை என்பதும் பட்டவர்த்தனமான உண்மை என்றும் தெரிவித்திருக்கின்றார்.

சிறிலங்காவின் விவகாரங்களில் வெளிநாட்டுத் தலையீடுகளை திணிக்கக் கூடாது என வலியுறுத்தி சிறிலங்கா அரச தலைவர் ஐ.நா பொதுச் சபையில் ஆற்றிய உரைக்கு கடும் கண்டனம் தெரிவித்து கருத்துத் தெரிவிக்கும் போதே ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

போர் குற்றச்சாட்டுகளுக்கும், மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கும் முகம்கொடுத்துள்ள சிறிலங்கா இராணுவத்தை பாதுகாப்பதே சிறிலங்கா அரச தலைவரின் முற்றுமுழுதான நோக்கம் என்றும் சுரேஷ் பிறேமச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.

No comments

Latest Articles