அட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டிக்கோயா தரவாளை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் தங்க சங்கிலியை அருத்து கொண்டு ஒடிய நபர் அட்டன் பொலிஸாரின...
அட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டிக்கோயா தரவாளை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் தங்க சங்கிலியை அருத்து கொண்டு ஒடிய நபர் அட்டன் பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
27.09.2018. வியாழகிழமை மாலை டிக்கோயா நகரபகுதிக்கு வருகை வந்து மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்த பெண்னை மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் குறித்த பெண்ணை பின் தொடர்ந்து சென்று பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை அருத்து கொண்டு ஓடியுள்ளதாக அட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது
சம்பம் தொர்ப்பில் குறித்த பெண் அட்டன் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யபட்ட முறைபாட்டுக்கு அமைய விசாரனைகளை மேற்கொண்ட அட்டன் பொலிஸார் குறித்த சந்தேகநபரை 28.09.2018.காலை கைது செய்துள்ளதாகவும் குறித்த பெண்ணின் தங்க சங்கிலியையும் அட்டன் பொலிஸார் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யபட்ட சந்தேக நபர் இன்றயதினம் அட்டன் நீதாவன் நீதிமன்றில் ஆஜர்படுத்த பட உள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது
.



No comments