Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

ஈழத்தமிழருக்கான போராட்டத்தில் அதிமுகவினர் செய்த முகம் சுளிக்க வைக்கும் செயல்.!

கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையை கண்டித்தும், அதில் பங்கு கொண்டிருந்தவர்களை போர்க்குற்றவாளிகளாக அறிவித்து தண்டிக்...




கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையை கண்டித்தும், அதில் பங்கு கொண்டிருந்தவர்களை போர்க்குற்றவாளிகளாக அறிவித்து தண்டிக்க வேண்டுமெனவும் கோரி நேற்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

சென்னையில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக கூடியிருந்த மக்களை களைந்து செல்லவிடாமல் தடுப்பதற்காக அதிமுக சார்பில் ஆடல் - பாடல் நிகழ்ச்சி பொதுக்கூட்ட மேடையில் நடத்தப்பட்டது. அப்போது, சினிமா பாடல்களுக்கு நடமாடினர் நடன கலைஞர்கள்.

அதற்கு பின்னதாக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கு பெற்ற நிர்வாகிகள் இலங்கை அரசுக்கு உதவிய காங்கிரஸ் - திமுக கூட்டணியை கடுமையாக சாடி பேசினர். அந்த வழியே சென்ற பொதுமக்கள் பலர் இனப்படுகொலையை கண்டித்து போராட்டம் நடத்துவதாக கூறிவிட்டு இப்படியெல்லாம் ( ஆடல் - பாடல்) அதிமுகவினர் நடந்துகொள்வதா என விமர்சித்தவாறே சென்றனர்.

ليست هناك تعليقات

Latest Articles