Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

அதிரடிப்படையை மீறி ரணிலை நோக்கிவந்த பேராபத்து! அதிர்ந்துபோன பொலிஸ்!!

ஸ்ரீ லங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம் திடீர் விபத்து ஒன்றிலிருந்து தப்பியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள...


ஸ்ரீ லங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம் திடீர் விபத்து ஒன்றிலிருந்து தப்பியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ராஜகிரிய என்ற இடத்திலேயே இந்த திடீர் சம்பவத்திற்கு அவர் முகம்கொடுத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்லகமவின் நெருங்கிய உறவினர் ஒருவரின் மரணச் சடங்கில் கலந்துகொண்டுவிட்டு மீண்டும் திரும்ப முற்பட்டபோது இது நிகழ்ந்துள்ளது.

மரணச் சடங்கில் கலந்துகொண்டபின் மீண்டும் திரும்புவதற்காக தனது வாகனத்தில் ஏறுவதற்கு முயன்றுள்ளார். இதன்போது அவ்வழியால் வேகமாக வந்த உந்துருளியொன்று அவரைச் சூழ்ந்திருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்மீது மோதியது. இதனால் இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் காயமடைந்தனர்.

பிரதமர் ரணில் வாகனத்தில் ஏறுவதற்காக வீதியில் வந்தபோது பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டிருந்த பொலிஸார் குறித்த உந்துருளியைச் செலுத்திவந்த இளைஞனை தடுத்துள்ளனர். ஆனாலும் நிறுத்தாமல் தொடர்ந்தும் ஓட்டிச்சென்ற இளைஞர் விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் இல்லாத நிலையிலேயே குறித்த இளைஞர் உந்துருளியை நிறுத்தாமல் ஓட்டி தப்ப முயன்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் குறித்த விபத்தினால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

ليست هناك تعليقات

Latest Articles