தியாக தீபம் திலீபனின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று தமிழர் தாயகமெங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. ஐந்து அம்சக் ...
தியாக தீபம் திலீபனின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று தமிழர் தாயகமெங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.
ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து நல்லூரில் திலீபன் உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்த இடமான நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இன்று நினைவேந்தல் நிகழ்வுகளை உணர்வுபூர்வமாக மேற்கொண்டுவருகின்றனர்.
அதேவேளை, தமிழர் தாயகத்தின் பல பகுதிகளிலும் புலம்பெயர் தேசங்களிலும் இன்று திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் எழுச்சிபூர்வமாக இடம்பெறவுள்ளன என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
அதேவேளை திலீபனின் நினைவு நாளையொட்டி இன்று கைதடியிலிருந்து இரு இளைஞர்கள் தூக்கு காவடி எடுத்தவாறு நல்லூரிலுள்ள நினைவேந்தல் அமைந்துள்ள இடத்தில் நிறைவு செய்துள்ளனர்.
அதனையடுத்து இந்நினைவேந்தல் நிகழ்வில் யாழ் மேயர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டு திலீபன் உயிர்நீத்த அதே நேரத்தில் ஈகைச்சுடரேற்றி உணர்வ பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.








No comments