கிளிநொச்சி உருக்திரபுரம் நீவில் பகுதியில் சட்ட விரோத மண் அகழ்வு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. ஊடகங்கள் வாயிலாக பலமுறை தெரியப்படுத்தியும்...
கிளிநொச்சி உருக்திரபுரம் நீவில் பகுதியில் சட்ட விரோத மண் அகழ்வு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. ஊடகங்கள் வாயிலாக பலமுறை தெரியப்படுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.
எனினும் காணி எல்லை பிரச்சனை சம்பந்தமாக அப்பகுதிக்கு சக பணியாளர் மூவருடன் நீவில் கமக்கார அமைப்பு செயளாளர், உபதலைவர் ஆகியோரை அழைத்துச் சென்ற உருத்திரபுரம் பெரும்போக உத்தியோகத்தர் திரு.சுந்தரமூர்த்தி சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபட்ட 4 உழவியந்திரங்களை அடையாளம் கண்ட கொண்டார்.
அதில் ஒரு உழவியந்திரத்தின் அனுமதிப்பத்திரத்தை பறிமுதல் செய்ததுடன் இன்னொரு உழவியந்திரத்தில் ஏற்றப்பட்டிருந்த மண்ணை மீள பறித்ததால் மணல் ஏற்றி உழவியந்திர உரிமையாளர்கள் தாக்கும் திட்டத்துடன் ஒன்று கூடியதால் அங்கிருந்து விலகி அலுவலகம் சென்று விட்டனர்.
எனினும், மாலை வேளையில் கப்ருக்க சங்கத்தின் உறுப்பினர்களுக்கான தென்னங்கன்று விநியோகத்தில் ஈடுபட்டிருந்த நீவில் பகுதி கமக்கார அமைப்பு செயளாளரை குழுவாக வந்த உழவியந்திர உரிமையாளர்கள் தாக்க முற்பட்டதுடன் தகாத வார்தைகளினால் திட்டியும், உயிர் அச்சுறுத்தலும் விடுத்தனர்.
ஆயினும் உருத்திரபுரம் வடக்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் மற்றும் அங்கிருந்தவர்களின் தலையீட்டினால் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக கமநல சேவை நிலையத்திற்கும், கிராம சேவையாளருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.


ليست هناك تعليقات