Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

ரயிலுடன் மோதி இளைஞன் உயிரிழப்பு!

ரயில் மோதி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி நேற்றிரவு சென்ற ரயில் மோதியே குறித்த இ...

ரயில் மோதி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி நேற்றிரவு சென்ற ரயில் மோதியே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளான்.


இந்தச் சம்பவம் சித்தாண்டி – முறக்கொட்டான்சேனை தேவபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.


இவ்வாறு உயிரிழந்த இளைஞன் சித்தாண்டி – 1, அலைமகள் வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய சிவகுமார் குவேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


உயிரிழந்துள்ள இளைஞனின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




No comments

Latest Articles