Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

அமைச்சரவையின் புதிய அனுமதி

 இலங்கைப் பெண்களுக்கு வீட்டு மற்றும் வீட்டுப் பணிகள் சார்ந்த வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களில் ஈடுபடுவதற்காக தற்போது காணப்படும் குறைந்தபட்ச வய...

 இலங்கைப் பெண்களுக்கு வீட்டு மற்றும் வீட்டுப் பணிகள் சார்ந்த வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களில் ஈடுபடுவதற்காக தற்போது காணப்படும் குறைந்தபட்ச வயதெல்லை சவூதி அரேபியாவுக்கு 25 உம், ஏனைய மத்திய கிழக்கு நாடுகளுக்கு 23 உம் மற்றும் ஏனைய நாடுகளுக்கு 21 உம் ஆகவுள்ளது.


தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளைக் கருத்தில் கொண்டு குறித்த வயதெல்லையைத் திருத்தம் செய்தல் தொடர்பாக விடயங்களை ஆராய்ந்து அமைச்சரவைக்குப் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரின் தலைமையில் அமைச்சரவை உப குழுவொன்றை நியமிப்பதற்கு 2022 யூன் மாதம் 06 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய, குறித்த உபகுழுவால் சமர்ப்பிக்கப்படும் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு இலங்கைப் பெண்கள் வீட்டு மற்றும் வீட்டுப் பணிகள் சார்ந்த வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களில் ஈடுபடுத்தும் குறைந்தபட்ச வயதை 21 ஆக திருத்தம் செய்வதற்கு அங்கீகாரம் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.








No comments

Latest Articles