தலித்தின ஆண்களின் சுயமரியாதையை மீட்டெடுப்பதில் தலித் பெண்களுக்கு வரலாறுதொட்டே எப்பொழுதும் பெரும்பங்கு இருந்திருக்கிறது. சொம்பில் தண்ணீர் கொண...
தலித்தின ஆண்களின் சுயமரியாதையை மீட்டெடுப்பதில் தலித் பெண்களுக்கு வரலாறுதொட்டே எப்பொழுதும் பெரும்பங்கு இருந்திருக்கிறது. சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து, பவ்யமாக கைகட்டி, கணவன் பின்னால் நிற்கும் பெண்களல்ல அவர்கள்.
'வேலெடுத்து துரத்தப்பட்டோம்', சாதி பலி தந்து சந்தனம்,குங்குமம் பூசிக்கொண்டோம்'
எசிலிக்கு எசிலியாக, ராட்சசர்களுக்கு ராட்சசிகளாக, அன்புக்கு அன்பாக, முகத்துக்கு நேராக ஊடகை, காதலை, கூடலைக் கொட்டித்தரும் அசுரச்சிகள்.
கருத்த, கம்பீரமான தன் ஆண் இதர சமூக ஆண்களின் முன்பு அடிமையாய் தலைகுனிவதை அவர்கள் எப்பொழுதும் விரும்பியதில்லை.
பெரும்பான்மை கிராமிய சாதிக்கொடுமைகளிலிருந்து ஆண்களை நகரங்களுக்கு நகர்த்தி கல்வியில்,வேலையில், சமூகத்தில் ஆண்களை ஆளாக்குகிறவர்களாக அவர்களே இருக்கிறார்கள்.
ஒவ்வொரு பாடலிலும் தனிக்கதை சொல்லும் அதே நேர்த்தியில்
@mari_selvaraj
இம்முறை அப்படியொரு தலித் பெண்ணான பண்டாரத்தி புராணத்துடன் வந்திருக்கிறார்.
"எங் கக்கத்துல வச்ச துண்டை தோளு மேல போட்டுவிட்டா.., தோரணயா நான் நடக்க வாலிபத்த ஏத்திவிட்டா" எனும் யுகபாரதியின் வார்த்தைகள் வெறுமனே வார்த்தைகள் மட்டுமல்ல நிஜ வரலாறும் அதுதான்.
ஒவ்வொரு தலித் ஆடவரையும் ஆளாக்கிய அத்தனை பண்டாரத்திகளுக்கும் சேர்த்து மாரி இப்பாடலை சமர்ப்பணம் செய்திருக்கிறார். காலரா கொண்டு போன பண்டாரத்தியை நினைத்து மைக்கில் உருகும் லாலைப் பார்க்கையில் நம் கண்களும் குளமாக ஆகிறது.
காதலே பிரபஞ்ச மாடத்தின் வெளிச்சம். ❤
#PandarathiPuranam



No comments