Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

மோட்டோ ஜி100 வெளியீட்டு விவரம்

மோட்டோ ஜி100 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் மார்ச் 25ஆம் தேதி அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரென்டர்கள் இ...

மோட்டோ ஜி100 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் மார்ச் 25ஆம் தேதி அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. தற்போது புது ஸ்மார்ட்போனின் டீசரை மோட்டோரோலா வெளியிட்டு இருக்கிறது. 


புதிய மோட்டோ ஜி100 அந்நிறுவனம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்த மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போனின் ரி-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது.


மோட்டோரோலா வெளியிட்டு இருக்கும் டீசர்களில் தேதியை குறித்து கொள்ளுங்கள் எனும் வாசகம் மற்றும் மார்ச் 25 மட்டுமே குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த தேதியில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் அடுத்தடுத்த டீசர்களில் தெரியவரும்.


முந்தைய தகவல்களின் படி மோட்டோ ஜி100 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், பக்கவாட்டில் கைரேகை சென்சார், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், கீழ்புறத்தில் ஸ்பீக்கர் கிரில் வழங்கப்படும் என கூறப்பட்டது. மேலும் இதில் குவாட் கேமரா சென்சார், டூயல் செல்பி கேமரா வழங்கப்படலாம். 




No comments

Latest Articles