Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

எயிட்ஸ் போன்று கொரோனாவும் உலகை விட்டு நீங்காது... கைவிரித்தது WHO

உலகளவில், மனித குலத்தில் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸை அடியோடு அழிக்க முடியாது. எனவே அதனுடன் வாழப் பழகுவது குறித்து கற்றுக்கொள்ள வேண...

உலகளவில், மனித குலத்தில் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸை அடியோடு அழிக்க முடியாது. எனவே அதனுடன் வாழப் பழகுவது குறித்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

கொரோனா வைரஸை உலகத்தில் இருந்து நாம் அடியோடு அழித்துவிட முடியாது. அது எப்போது நம்மிடமிருந்து விலகி மறையும் என்பதை கணிக்கவும் முடியாது. அத்தோடு, ஆட்கொல்லி வைரஸான எச்.ஐ.வி. போல கொரோனாவும் உயிர்ப்புடன் நம்முடனேயே இருக்கும். 

கொரோனா வைரஸ் என்பது நீண்டகாலத்துக்கு பிரச்சினையை ஏற்படுத்தவும் செய்யலாம். அதேநேரத்தில் கொரோனாவால் நீண்டகாலம் பிரச்சினை வராமலும் போகலாம். ஆனால் கொரோனா எப்போது அழியும் என்பதை யாராலும் முன்னரே எதிர்வு கூறிவிட முடியாது.

தற்போதைய நிலையில் கொரோனா வைரஸ் இருக்கும் சூழ்நிலையில் நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். கொரோனாவுக்கு எதிராக பல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த மருந்துகள் சோதனைக் கூடங்களில் பரிசோதிக்கப்பட்டும் வருகின்றன. ஆனால் கொரோனாவுக்கு எதிரான வலிமையான மருந்து இதுதான் என ஒன்றை சுட்டிக்காட்டி உறுதி செய்வது கடினமாக உள்ளது. 

காணொளி மூலமான மாநாடொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால நிபுணர் மைக் ரியான் மேற்கண்டவாறு தெரிவித்தார்

No comments

Latest Articles