Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

கூட்டமைப்பின் தலைவர்கள் மீது சுமந்திரன் கடும் பாய்ச்சல். (VIDEO)

அறிக்கை விட்டவர்கள் யாராவது ஆயுதம் ஏந்திப் போராடவேண்டும் என்று ஒருவர் முன் வந்தால் நான் அவனை மதிப்பேன், ஆனால் பொய்யாக மக்களின் உணர்வுகளில் ப...


அறிக்கை விட்டவர்கள் யாராவது ஆயுதம் ஏந்திப் போராடவேண்டும் என்று ஒருவர் முன் வந்தால் நான் அவனை மதிப்பேன், ஆனால் பொய்யாக மக்களின் உணர்வுகளில் பொறுப்பில்லாமல் நாங்கள் ஆயுதப் போராட்டத்துக்கு ஆதரவானவர்கள் என்று இன்றைக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறவர்கள் என்னுடைய மதிப்பைப் பெறவே மாட்டார்கள்.
அவர்களை மக்கள் நிராகரிக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சை குறித்து சுமந்திரன் தன்னிலை விளக்கம் அளித்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஒவ்வொரு விடயத்திற்காகவும் தன்னைத் தொடர்புகொள்கின்ற தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உட்பட கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கை விடுவதற்கு முன் தன்னைத் தொடர்பு கொண்டு கேட்கவேயில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.

No comments

Latest Articles