என் வருங்கால குழந்தைகளின் தாய் என்று குறிப்பிட்டு நடிகை நயன் தாராவுக்கு, இயக்குநர் விக்னேஷ் சிவன், அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளா...
என் வருங்கால குழந்தைகளின் தாய் என்று குறிப்பிட்டு நடிகை நயன் தாராவுக்கு, இயக்குநர் விக்னேஷ் சிவன், அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அன்னையர் தினத்தை முன்னிட்டு பலரும் தங்கள் அன்னைக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். பிரபலங்கள் பலரும் தங்களது தாயுடன் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு, வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த வகையில் விக்னேஷ் சிவனும் தனது தாய்க்கு அன்னை தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
மேலும் இயக்குநர் விக்னேஷ் சிவன் - நடிகை நயன்தாரா நீண்ட காலமாக காதலித்து வரும் நிலையில், அன்னையர் தினத்தை ஒட்டி ஸ்பெஷல் வாழ்த்து தெரிவித்துள்ளார். நயன்தாரா தன் அம்மாவுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் நயன்தாரா ஒரு குழந்தையை தூக்கி வைத்திருக்கும் படத்தையும் வெளியிட்டுள்ளார். “என் வருங்கால குழந்தைகளின் தாயின் கையில் இருக்கும் குழந்தையின் தாய்க்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.




No comments