Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் - இதுவரை 3164 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்...

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. எனினும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துள்ளது. மொத்தம் 101139 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4970 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 134 பேர் மரணம் அடைந்துள்ளனர். 

இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3164 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 39 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 2350 பேர் குணமடைந்துள்ளனர். 

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 35058 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1249 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 11745 பேருக்கும், தமிழகத்தில் 11760 பேருக்கும், டெல்லியில் 10054 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments

Latest Articles