Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

யாழ் பேருந்து நிலையத்தில் முதியவரை அடித்து தூக்கிய பேருந்து!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய வளாகத்துக்குள் பேருந்து மோதி முதியவர் ஒருவர் படுகாயமடைந்தார். அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தி...


யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய வளாகத்துக்குள் பேருந்து மோதி முதியவர் ஒருவர் படுகாயமடைந்தார். அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

சம்பவத்தையடுத்து அங்கு குழப்பம் ஏற்பட்டது. எனினும் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விபத்து ஏற்பட்ட பேருந்தை பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருத்து பருத்தித்துறைக்கு புறப்பட்ட பேருந்து வளாகத்துக்குள் இருக்கும் அலுவலகத்துக்கு முன்பாக பயணித்த போது முதியவர் ஒருவரை மோதியது. சம்பவத்தையடுத்து முதியவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பேருந்தை சாரதி வேகமாகச் செலுத்தி வந்ததால்தான் விபத்து ஏற்பட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். அங்கு மக்கள் கூடியதால் குழப்பநிலை ஏற்பட்டது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், விபத்தை ஏற்படுத்திய பேருந்தை பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.

ليست هناك تعليقات

Latest Articles