Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

யாழில் பொதுமக்களின் எதிர்ப்பால் திரும்பிய 5ஜி கோபுரம்!

யாழில் தாராளமாக 5ஜி கோபுரம் அமைக்கப்பட்டு வரும் நிலையில், தமது பகுதியில் நிறுவ கொண்டு வரப்பட்ட கோபுரத்தை குருநகர் மக்கள் ஒன்றுகூடி திர...


யாழில் தாராளமாக 5ஜி கோபுரம் அமைக்கப்பட்டு வரும் நிலையில், தமது பகுதியில் நிறுவ கொண்டு வரப்பட்ட கோபுரத்தை குருநகர் மக்கள் ஒன்றுகூடி திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.

இன்று (17) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மின்னல் வேகத்தில் 5 ஜி அலைக்கற்றை கோபுரங்கள் நிறுவப்பட்டு வருகிறது. யாழ் மாநகரசபை உள்ளிட்ட பல்வேறு உள்ளூராட்சி மன்றங்களில் இது சர்ச்சைக்குரிய விடயமாக தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்த நிலையில், இன்று குருநகர் கிழக்கில் 5ஜி தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கும் பணியை அந்த பகுதி மக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

தொலைத்தொடர்பு கோபுரங்கள் கொழும்பிலிருந்து கொண்டு வரப்பட்டிருந்தன. இதையடுத்து அந்த பகுதியில் ஒன்றுகூடிய மக்கள் இதற்கு தமது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர்.

பொதுமக்களின் எதிர்ப்பையடுத்து, கோபுரங்களுடன் தொலைபேசி நிறுவன ஊழியர்கள் திரும்பிச் சென்றனர்.

ليست هناك تعليقات

Latest Articles