Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

யாழில் மர்ம நபர்களின் அடாவடி! விமானப்படை அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை!

யாழ்ப்பாணம் ஊரெழுப் பகுதியில் விமானப்படை அதிகாரியிடம் மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,...


யாழ்ப்பாணம் ஊரெழுப் பகுதியில் விமானப்படை அதிகாரியிடம் மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பலாலி இராணுவ முகாமில் விமானப் படை அதிகாரியாக பணியாற்றும் ஒருவர் தனது குடும்பத்தாருடன் சொந்த ஊரான பொலநறுவை செல்வதற்காக இன்று அதிகாலை முச்சக்கர வண்டியில் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துள்ளார்.

இதன் போது ஊரெழு பகுதியில் வைத்து இடைமறித்த முகமூடி அணிந்த மர்ம கும்பல் அவர்களிடமிருந்து நகை பணம் போன்றவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

No comments

Latest Articles