Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

கிளிநொச்சியில் விபத்து! முதியவர் பலி!

கிளிநொச்சியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி 155ஆம் ...


கிளிநொச்சியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி 155ஆம் கட்டை ஏ9 வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்த முதயவரை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸார, தனியார் நிறுவனமொன்றின் காவல் தொழிலாளியாக பணிபுரியும் குறித்த நபர் இன்று காலை பணிக்காக சைக்கிளில் பயணித்தவேளை, தென்னிலங்கையில் இருந்து வந்த பேருந்துடன் மோதியதாலேயே உயிரிழந்தார் என தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் மலையாளபுரம் பகுதியைச் சேர்ந்த 8 பிள்ளைகளின் தந்தையான சின்னையா சுப்ரமணியம் எனும் 73 வயதான முதியவரே உயிரிழந்தவர் என ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

ليست هناك تعليقات

Latest Articles