வெளிநாட்டு மதுபானங்ளை விற்பனை செய்தல் அதனை கொண்டுச் செல்லல் மற்றும் அதனை வைத்திருத்தல் போன்றவற்றுக்கான எல்லை 7.5 லீற்றரில் இருந்து 80 லீற்...
வெளிநாட்டு மதுபானங்ளை விற்பனை செய்தல் அதனை கொண்டுச் செல்லல் மற்றும் அதனை வைத்திருத்தல் போன்றவற்றுக்கான எல்லை 7.5 லீற்றரில் இருந்து 80 லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
கலால் திணைக்களத்தின் பதில் ஆணையாளரும், ஊடகப் பேச்சாளருமான கபில குமாரசிங்க இதனை அததெரணவிடம் தெரிவித்தார்.
31.12.2015 ஆம் ஆண்டு திகதியிடப்பட்ட 194 கீழ் 41 ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் 985 என்ற கலால் அறிவிப்பில் நாடு முழுவதில் உள்ள மதுபான சாலைகளில் வெளிநாட்டு மதுபானங்களை சில்லறை விலைக்கு விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச எல்லை 7.5 லீற்றராக அமைந்திருந்திருந்தது.
அனுமதிக்கப்பட்ட உரிமையாளர் அல்லது வியாபாரி அல்லாத நபருக்கு 7.5 லீற்றருக்கும் அதிகமான வெளிநாட்டு மதுபானங்களை தம்வசம் வைத்திருப்பதற்கு பிரதேச செயலாளரின் அனுமதி பத்திரம் அவசியப்படுகின்றது.
இவ்வாறான சட்டங்கள் அறிமுகப்படுத்தபட்டவுடன் சாதாரண பொதுமகன் ஒருவருக்கு வெளிநாட்டு மதுபானங்களை எடுத்துச் செல்வதில் பிரச்சினைகள் ஏற்பட்டன.
இதனை கருத்திற்கொண்டே அதிகபட்ச எல்லை 7.5 லீற்றரில் இருந்து 80 லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த புதிய சட்டம் கடந்த செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதியில் இருந்து அமுல்படுத்தப்பட்டதாக அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.



ليست هناك تعليقات